Skip to main content

எஸ். பி. சி தாஸிமின் மறைவூக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்


மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ தேசிய கவுன்ஸிலின் ஸ்தாபகரும் நாடறிந்த சமூக சேவையாளருமான எஸ். பி. சி தாஸிமின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ். பி. சி ஹலால்டீனின் மூத்த சகோதரரான மர்ஹூம் தாஸிம் அவர்கள் போரத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு பங்களிப்புக்களை வழங்கியூள்ளார்.



இலங்கை வாழ் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக பாடுபட்ட இவர் மாளிகாவத்தையில் வை.எம்.எம்.ஏ (முஸ்லிம் வாலிபர் சங்க) தேசிய கவுன்ஸிலை ஸ்தாபித்து அதன் மூலம் தாய் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றிய சிறந்த ஒரு முன்னணி சமூக சேவையாளராவார்.



தனது சகோதரரான எமது போரத்தின் ஸ்தாபகர் எஸ் பி சி ஹலால்டீனின் மனைவியான இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியை மர்ஹூமா பாத்துமுத்து ஹலால்டீனின் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வருடாந்தம் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி கல்விக்காக சேவையாற்றி வந்தமை குறிப்பிடதக்கது.



சவுதி அரேபியாவில் இஸ்லாமிய வங்கித்துறையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் கனடாவின் டொரொன்டோ நகரில் வாழ்ந்து வந்த நிலையில் தனது 77வது வயதில் 2018.04.17ஆம் திகதி இறையடி சேர்ந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை மீடியா போரம் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனத்தை அடைய பிராரத்திப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது