ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த 59ஆவது ஊடக செயலமர்வு கல்எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (2018.03.31) மிகவவும் சிறப்பாக நடைபெற்றது.
போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேற்படி கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஏ.சி முஹம்மட் சுபைர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
"21ஆவது நூற்றாண்டில் ஊடகம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் ஏ. ஹில்மி முஹம்மத், மற்றும் ஊடகவியலாளர் பிரோஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ். எம். நௌபர் விஷேட உரை நிகழ்த்தியதுடன் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம், போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான திருமதி புர்கான் பீ இப்திகார், திருமதி ஸமீஹா ஸபீர் ஆகியோர் அமர்வுகளுக்கு தலைமை தலைமை வகித்தனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபை தலைவர் அல்ஹாஜ் எஸ். ஏ. சி. எம். சுபைர், கல்லூரி அதிபர் திருமதி பரீதா முஸம்மில், சட்டத்தரணி சல்மான் ரியாழ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.