Skip to main content

ஸாதிக் ஷிஹான் மற்றும் நுஸ்கி முக்தார் துருக்கி ஊடக செயலமர்வில் பங்‌கேற்பு



துருக்கியின் தலைநகரான அங்காரவில் இரு வாரங்கள் நடைபெறவுள்ள இராஜதந்திர ஊடகவியல் (Diplomacy Journalism) தொடர்பான பயிற்சிநெறி மற்றும் பிராந்திய வெளிநாட்டு கொள்கை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் செயற்குழு உறுப்பினர்கள் இருவர் இன்று (28) துருக்கி நோக்கி பயணமானார்கள்.

துருக்கி அரசாங்கத்திடம் முஸ்லிம் மீடியா போரம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி ஊடக செயலமர்வில் கலந்துகொள்வதற்கு 10 இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்‌களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உதவி பொருளாளர் நுஸ்கி முக்தார் ஆகியோர் துருக்கி பயணமாகியுள்ளனர். 

முஸ்லிம் மீடியா போரத்தினால் துருக்கி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 10 இளம் ஊடகவியலாளர்களில் ஏனைய 8 பேரும், தலா 2 பேர் வீதம் அடுத்தடுத்து நடைபெறும் ஊடகத்துறை பயிற்சிநெறியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த துருக்கியின் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதி அர்துகானின் ஆலோசகருமான பேராசிரியர் தாவூத் டொக்லேவிடம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி அரசாங்கம் மற்றும் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி முழுநேர இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துருக்கி பிரதமரின் கீழ் இயங்கும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் Turkish Cooperation and Coordination Agency (TIKA) மற்றும் Anadolu Agency's News Academy ஆகிய நிறுவனங்களினால் ஏப்ரல் 30 தொடக்கம் மே 11 வரை இந்த பயிற்சிநெறி நடைபெறவுள்ளது.


இரு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி நெறியின் ஓர் அங்கமாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு, கலாசார அமைச்சு அரச மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது