துருக்கியின் தலைநகரான அங்காரவில் இரு வாரங்கள் நடைபெறவுள்ள இராஜதந்திர ஊடகவியல் (Diplomacy Journalism) தொடர்பான பயிற்சிநெறி மற்றும் பிராந்திய வெளிநாட்டு கொள்கை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் செயற்குழு உறுப்பினர்கள் இருவர் இன்று (28) துருக்கி நோக்கி பயணமானார்கள். துருக்கி அரசாங்கத்திடம் முஸ்லிம் மீடியா போரம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி ஊடக செயலமர்வில் கலந்துகொள்வதற்கு 10 இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உதவி பொருளாளர் நுஸ்கி முக்தார் ஆகியோர் துருக்கி பயணமாகியுள்ளனர். முஸ்லிம் மீடியா போரத்தினால் துருக்கி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 10 இளம் ஊடகவியலாளர்களில் ஏனைய 8 பேரும், தலா 2 பேர் வீதம் அடுத்தடுத்து நடைபெறும் ஊடகத்துறை பயிற்சிநெறியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த துருக்கியின் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதி அர்துகானின் ஆலோசகருமான பேராசிரியர் தாவூத் டொக்லேவி