A+ A-

முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் முபாரக் அலி காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் சுதந்திர ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் எம்.கே. முபாரக் அலி இன்று (05.03.2018) காலமானார். 

அவரது ஜனாஸா இல. 71 தெமட்டகொட வீதி, கொழும்பு 09 வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாஸா நல்லடக்கம் இன்று (05.03.2018) அஸர் தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராக தொடர்ச்சியாக 12 வருடங்கள் செயற்பட்டு வந்த இவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரின் இணைப்பாளராக நீண்ட காலம் செயற்பட்டுள்ளார்.  

இவரது மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.