ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வின் 59வது செயலமர்வு நாளை 31ஆம் திகதி சனிக்கிழமை (31.03.2018) கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. “21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப் பொருளில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது. காலை 9 மணி தொடக்கம் மாலை வரை முழுநாளும் இரண்டு அமர்வுகளாக இடம்பெறும் இந்த செயலமர்வில் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் க.பொ. த சாதாரண மற்றும் உயர் தரத்தில் கல்விகற்றும் சுமார் 300 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், நகர திட்டமிடல