Skip to main content

முஸ்லிம் மீடியா போரத்தின் மாதம்பை ஊடக செயலமர்வு

மாணவர்களிடம் ஊடக அறிவை கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஒருநாள் ஊடக செயலமர்வு, கடந்த சனிக்கிழமை (24.02.2018) மாதம்பை அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நஸ்ரியா மத்திய கல்லூரி போன்றவற்றில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களில் கல்விகற்கும் சுமார் 150 தமிழ், முஸ்லிம் மாணவ, மாணவிகள் ஊடக செயலமர்வில் கலந்துகொண்டனர்.

அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் ஊடகத்துறையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து ஆரம்ப உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் ஊடக அறிமுகமும், அதிலுள்ள பயிற்சிநெறிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும், தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல் ஊடகத்துறையில் தமிழ் மொழி பற்றி விரிவுரை நிகழ்த்தினார்கள்.

அதன்பின்னர் ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ஊடகத்துறையை கையாள்தல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பாகவும், இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஹுனைத் எம். ஹாரிஸ் வானொலி ஊடகவியல் தொடர்பாகவும் விரிவுரை நடாத்தினார்கள். தொலைக்காட்சி செய்தியாளர் அஷ்ரப் ஏ. சமத் கமெரா நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார்.

இதன்போது, மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் முஸ்லிம் மீடியா போரத்தினால் ஒரு தொகுதி நூல்கள் அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலய நூலகத்துக்கு கையளிக்கப்பட்டன.

லேக் ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில், முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர்களின் ஒருவரான எஸ்.எம்.எம். முஸ்தபா மெளலவி, நவமணியைச் சேர்ந்த எம்.ஐ.எம். சாஹிர் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக சிலாபம் நகர சபை உறுப்பினர் ஏ.டபிள்யூ. சாஹுல் அமீன், சிலாபம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பிரிவு உதவிக் கல்வி பணிப்பாளர் அனிதா கமலேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
















Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது