Skip to main content

முஸ்லிம் மீடியா போரத்தின் 58வது ஊடகச் செயலமர்வு மாதம்பை அல் மிஸ்பாவில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில்  நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு வரிசையில் 58வது செயலமர்வு நாளை 24 ஆம் திகதி சனிக்கிழமை சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள மாதம்பை அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான இந்தச் செயலமர்வு சனிக்கிழமை காலை 9 மணிக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெறும்.

இரண்டு அமர்வுகளாக இடம்பெறும் இந்த செயலமர்வில் மாதம்பை அல்மிஸ்பா மாணவர்களுடன் அயலில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இந்த அமர்களில் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம் உள்ளிட்ட  வளவாளர்களாக கலந்துகொள்வர்.

மாலையில் அமர்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக சிலாபம் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சாஹுல் அமீன், சிலாபம் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி அனிதா கமலேந்திரன் (தமிழ் பிரிவு) உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் என பலரும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர். 

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது