மாணவர்களிடம் ஊடக அறிவை கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஒருநாள் ஊடக செயலமர்வு, கடந்த சனிக்கிழமை (24.02.2018) மாதம்பை அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நஸ்ரியா மத்திய கல்லூரி போன்றவற்றில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களில் கல்விகற்கும் சுமார் 150 தமிழ், முஸ்லிம் மாணவ, மாணவிகள் ஊடக செயலமர்வில் கலந்துகொண்டனர். அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் ஊடகத்துறையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து ஆரம்ப உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் ஊடக அறிமுகமும், அதிலுள்ள பயிற்சிநெறிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும், தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல் ஊடகத்துறையில் தமிழ் மொழி பற்றி விரிவுரை நிகழ்த்தினார்கள். அதன்பின்னர் ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ஊடகத்துறையை கையாள்தல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பாகவும், இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஹுனைத் எம். ஹாரிஸ் வானொலி ஊடகவியல் தொடர்பாகவும் விரிவுரை நடாத்தி