ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 20ம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நிகழ்ந்த இந்த கூட்டத்தின் போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிதி மொஹமட் பாரூக் கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் முஸ்லிம் சேவை தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.