சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவிக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரத்தின் முன்னோடி அமைப்பான முஸ்லிம் மீடியா அலைன்ஸின் ஸ்தாபக தலைவரும் “த எகனொமிக் டைம்ஸ்” சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.ஸீ.ஏ. கபூர் அவர்களின் மூத்த புதல்வியான ஹாஜியானி திம்ஸி பாஹிம் தனது தந்தையின் மறைவையடுத்து கடந்த நான்கு தசாப்தங்களாக அதன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். ஊடகவியல் துறையில் முஸ்லிம் பெண்கள் அரிதாகவே பணியாற்றி வரும் நிலையில், கடந்த நான்கு தசாப்தங்களாக அவர் ஆற்றி வந்த ஊடகப் பணி மகத்தானது. மார்க்க விழுமியங்கள், ஒழுக்கங்களைப் பேணிய நிலையில் அவர் தொய்வின்றி இறுதி வரை தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தமை சாதனை என்றே சொல்ல வேண்டும். இவரது கணவன் அல்ஹாஜ் பாஹிம் கரீம் அவர்களும் ஓர் ஊடகவியலாளராக இருந்து அவரது பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தார். இலங்கையின் பொருளாதார செய்திகளை சர்வதேசமயப்படுத்தியதில் ‘த எகனொமிக் டைம்ஸின்’ பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளிநாட்டுத் தூ