Skip to main content

முஸ்லிம் மீடியா போரத்தின் சில முக்கிய பதவிகளில் மாற்றம்




ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சில முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் தலைமையில் போரத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் மாவட்ட அமைப்பாளரகளின் முதலாவது கூட்டம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன் போதே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர், தேசிய அமைப்பாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய பதவிகளிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.

இதற்கமைய போரத்தின் தேசிய அமைப்பாளராக இதுவரை காலம் பதவிவகித்த அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் புதிய பொருளாளராகவும், இதுவரை காலமும் பொருளாளராக பதவி வகித்த எம். இஸட் அஹ்மத் முனவ்வர் புதிய தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உப பொருளாளராக பதவி வகித்த ஹனீபா எம் பாயிஸ் அண்மையில் காலஞ்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நுஸ்கி முக்தார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாயிஸின் மறைவினால் ஏற்பட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிடத்துக்கு கலைவாதி கலீல் தெரிவு செய்யப்பட்டதுடன் போரத்தின் வன்னி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் எஸ் எம் சர்ஜான் நியமன உறுப்பினராக நிறைவேற்றுக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூக ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்குதல், நாடளாவிய ரீதியில் ஊடக பயிற்சிபட்டறைகளை நடத்துதல், ஊடக கற்கை நெறியை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கடந்த சனிக்கிழமை கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அலப்போவில் இடம்பெற்று வரும் மனிதத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் வகையில் கண்டனப் பிரேரனை ஒன்றும் இந்த கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது