Skip to main content

உழ்ஹிய்யாவின்போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்

இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலைவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம்.

உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வினயமாக வேண்டிக் கொள்கிறது.

குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும்.

உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிரதேச நிலைவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல், குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன், உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது. போயா தினத்தன்று அறுப்பு செய்வதை முற்றாக தவிர்ந்துக் கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும்.

முஸ்லிம் சமூகம் தொடர்ந்தேச்சியாக பல்வேறு சவால்களை, தாக்குதல்களை எதிர்நோக்கி வந்தபோதிலும் தற்போது ஓரளவு தணிந்திருக்கின்ற நிலையில் இந்த ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம்.

எனவே, சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் சிலர் எமது உழ்ஹிய்யா நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கக் கூடும். அத்தகையோருக்கு சந்தர்ப்பம் அளித்து விடாமல் மிகக் கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.


முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
17.08.2017

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது