Skip to main content

கவிக்கோவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு


பேராசிரியராக, அறிஞராக, இலக்கிய உலகின் பேரரசனாக, புதுக் கவிதை உலகின் பிதாமகனாக திகழந்த கவிக்கோ அப்துர் ரஹ்மானின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

இது தொடர்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

உருது கவிஞர்களின் பரம்பரையில் உதித்த கவிக்கோ உருது உள்ளிட்ட பல மொழி கவிதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ், ஆங்கிலம், உருது, பாரசீகம், ஹிந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர், காலத்தால் அழியாத அரிய பொக்கிஷங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.

சாகித்திய அகடமி உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான கவிக்கோவின் கவிதைகள் பல இலட்சக்கணக்கானோரை கவர்ந்தன. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம் என்று அவரது இலக்கியப் பணி விரிந்தது. 

இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்கி அதன் மூலம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை இந்தியாவிலும் பிற நாடுகளில் நடத்தி சாதனை படைத்தவர். கவி அரங்குகளை அதிர வைத்தவர். இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள், இலக்கிய ஒன்றுகூடல்களில் பங்கேற்று இலங்கையுடன் ஓர் அத்தியந்த உறவைப் பேணி வந்தவர்.

அவர் இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவராலும் மதிக்கப்பட்ட மனிதநேயமிக்க ஓர் ஆளுமை. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்து வந்த அவர், சமூக ஐக்கியத்திற்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் தனது பேனாவினால் போராடியவர்.
இத்தகைய பெருந்தகையான கவிக்கோ அப்துர் ரஹ்மான் தழிழ் கூறும் நல்லுலகிலிருந்து விடை பெற்று விட்டார்.

அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவன பாக்கியம் பெற பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடிய போரம்
03 ஜூன் 2017

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது