A+ A-

மூத்த எழுத்தாளர் புன்னியாமீன் காலமானார்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூத்த உறுப்பினரான உடதலவின்னையினைச் சேர்ந்த பீ.புன்னியமீன் இன்று காலை காலமானார்.

இவர் - மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமாவார். சுகயீனம் காரணமாக கண்டியிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.

இவரின் மரணம், ஊடகத் துறை, கல்வித் துறை மற்றும் எழுத்துத் துறை ஆகியவற்று பாரிய இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்தது.

விக்கிபீடியாவில் தமிழில் அதிகமான விடயங்களை பதிவேற்றியவர் என்ற பெருமையும் இவரையே சாரும் என மீடியா போரம் குறிப்பிட்டது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவரது குடும்பத்திற்கு மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
10 மார்ச் 2016