இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலைவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வினயமாக வேண்டிக் கொள்கிறது. குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொத