ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சில முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் தலைமையில் போரத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் மாவட்ட அமைப்பாளரகளின் முதலாவது கூட்டம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன் போதே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர், தேசிய அமைப்பாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய பதவிகளிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார். இதற்கமைய போரத்தின் தேசிய அமைப்பாளராக இதுவரை காலம் பதவிவகித்த அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் புதிய பொருளாளராகவும், இதுவரை காலமும் பொருளாளராக பதவி வகித்த எம். இஸட் அஹ்மத் முனவ்வர் புதிய தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உப பொருளாளராக பதவி வகித்த ஹனீபா எம் பாயிஸ் அண்மையில் காலஞ்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நுஸ்கி முக்தார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாயிஸின் மறைவினால் ஏற்பட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிடத்துக்கு கலைவாதி கலீல் தெரிவு செய்யப்பட்டதுடன்