Skip to main content

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த செயலமைர்வை கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஒருநாள் செயலமர்வில் உயர்தரத்தில் கல்விகற்கும் மற்றும் பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருக்கும் 107 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். ஊடகம் பற்றிய அறிமுகவுரையையும், உப தலைவர் தாஹா முஸம்மில் ‘ஊடக அடிப்படையியல்’ என்ற தலைப்பிலும், பொருளாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ‘ஊடகம் ஒரு சமூக நோக்கு’ என்ற தலைப்பிலும், தினகரன் ஊடகவியலாளர் ஸாதிக் சிஹான் 'ஊடகங்களின் கட்டமைப்பு' என்ற தலைப்பிலும், கலைவாதி கலீல் ‘ஊடகங்களில் தமிழ் மொழி’ என்ற தலைப்பிலும், நவமணி ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ‘சமூக ஊடகங்களின் தாக்கம்’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தினார்கள்.

மேலும் இச்செயலமர்வில் மீடியா போரத்தின் உபதலைவரும் தினகரன் தமிழ் பதிப்புகளுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.எம். நிலாம், பத்தி எழுத்தாளர் சட்டத்தரணி ஏ.எம்.வைஸ், பத்திரிகை முறைப்பாட்டுக்குழுவின் தமிழ்பிரிவு அதிகாரி அமீர் ஹுசைன், நவமணி ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் என்.எம்.எம். ஷபீக், கௌரவ அதிதியாக அல்மனார் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ், விசேட அதிதிகளாக தொழிலதிபர் எம்.ஜே.எம். றிஸ்வி, என்.எம். பாரிஸ் மற்றும் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் கங்கா மிரிஹல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரதர்ஸ் அமைப்பினால் முஸ்லிம் மீடியா போரத்துக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது