ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த செயலமைர்வை கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஒருநாள் செயலமர்வில் உயர்தரத்தில் கல்விகற்கும் மற்றும் பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருக்கும் 107 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். ஊடகம் பற்றிய அறிமுகவுரையையும், உப தலைவர் தாஹா முஸம்மில் ‘ஊடக அடிப்படையியல்’ என்ற தலைப்பிலும், பொருளாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ‘ஊடகம் ஒரு சமூக நோக்கு’ என்ற தலைப்பிலும், தினகரன் ஊடகவியலாளர் ஸாதிக் சிஹான் 'ஊடகங்களின் கட்டமைப்பு' என்ற தலைப்பிலும், கலைவாதி கலீல் ‘ஊடகங்களில் தமிழ் மொழி’ என்ற தலைப்பிலும், நவமணி ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ‘சமூக ஊடகங்களின் தாக்கம்’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தினார்கள். மேலும் இச்செயலமர்வில் மீடியா போரத்தின் உபதலைவரும் தினகரன் தமிழ் பதிப்புகளுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.எம். நிலாம், பத்தி எழுத்தாளர் சட்டத்தரணி ஏ.எம்.வைஸ், பத்திரிகை முறைப்பாட்