அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்காக ‘சேபால குணசேன விருதை கல்வியலாளர், முன்னாள் தூதுவர் சட்டத்தரணி ஜாவிட் யூஸுப்புக்கு வழங்கி வைக்கப்பட்டது. எமது போரத்தின் முன்னாள் செயலாளர் ஊடகவியலாளர் றிப்தி அலி விஷேட நிலைமைகளில் செய்தித் தேடலுக்கான பேராசிரியர் கே. கைலாசபதி -2020 விருதினை பெற்றுக் கொண்டார். எமது போரத்தின் உறுப்பினர் ஊடகவியலாளர் எம்.எச் பாத்திமா ஹுஸ்னா சிறந்த சுகாதாரப் பராமரிப்புக்கும் மருத்துவ அறிக்கைக்குமான 2019,2020 ஆண்டுகளுக்கான விருதுகளும், சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான -2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் என மூன்று விருதுகள் பெற்றுக் கொண்டுள்ளார். எமது போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் மானா. மக்கீனுக்கு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. விருதுகள், சான்றிதழ்கள் வென்ற அனைவருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.